ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம்: மத்திய அரசுக்கு 38 அமைப்புகள் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
x
ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டபிரிவு 370ஐ ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தமுமுக, எஸ்டிபிஐ, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, மே 17 இயக்கம், முக்குலத்தோர் புலிப் படை, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி, திராவிடர் விடுதலை கழகம் உள்ளிட்ட 30 அமைப்புகள் சார்பில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது, அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கூறி, அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த, திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், காஷ்மீர் விவகாரத்தில் ஒரு கருத்து கேட்பும் நடத்தப்படவில்லை என்றும், காங்கிரஸ், பா.ஜ.க இருவரும் செய்த துரோகம் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், இந்தியாவில் எல்லா மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களாக மாற்றும் உக்தி இது என்றும் அவர், விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்