சத்தியமங்கலம் : ஒற்றை யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையோர வனப்பகுதியில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது.
சத்தியமங்கலம் : ஒற்றை யானை தாக்கியதில் இளைஞர் உயிரிழப்பு
x
சத்தியமங்கலம் அருகே பவானிசாகர் - புஞ்சைபுளியம்பட்டி சாலையோர வனப்பகுதியில் ஒற்றை யானை நின்றுகொண்டிருந்தது. அப்போது  சாலையில் நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை யானை தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியது. அந்த பெண்ணை காப்பாற்ற முயன்ற பொதுமக்களை யானை துரத்தியது. இதில் நால்ரோடு கிராமத்தை சேர்ந்த குமார்  என்ற இளைஞரை யானை தும்பிக்கையால் கீழே தள்ளி காலால் மிதித்ததில் அவர் உயிரிழந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்