பிரதமருடன் வைகோ சந்திப்பு

நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என பிரதமர் மோடியை நேரில் சந்தித்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருடன் வைகோ சந்திப்பு
x
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் பிரதமர் மோடியை வைகோ சந்தித்து பேசினார்.  அப்போது, பொன்னாடை போர்த்தி பிரதமருக்கு மரியாதை செய்த வைகோ, ஜி.பு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகத்தை பரிசாக வழங்கினார். இதை தொடர்ந்து, தமிழக பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் வைகோ கொடுத்தார். அதில், நியூட்ரினோ , ஹைட்ரோ கார்பன் திட்டம், அணை பாதுகாப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இவை தவிர, கூடங்குளத்தில் அணுக் கழிவுகளைக் கொட்டக்கூடாது, காஷ்மீர் மாநிலத்தைப் பொறுத்தமட்டில் இந்திய அரசியல் சட்டம் 370, 35ஏ பிரிவுகளை மத்திய அரசு திருத்தினால் அதன் விளைவுகள் விபரீதம் ஆகிவிடும் என்பன உள்ளிட்டவைகள் அந்த கோரிக்கைகளில் அடங்கும். மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி, ஆயத்த மற்றும் பின்னல் ஆடைகள் தொழில் பாதுகாப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்