நண்பர்கள் தினத்தில் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய ஓய்வு பெற்ற காவல் துறையினர்

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, 50 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடிய ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஆரத்தழுவி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
x
1960 மற்றும் 70 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மதுரை காவல் கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகள், 'சங்கம திருவிழா' என்ற பெயரில் சந்தித்தனர். ஓய்வுபெற்ற ஐ.ஜி. முதல் ஜீப் ஓட்டுனர் வரை ஒன்றிணைந்த இந்த சந்திப்பில், பழைய நினைவுகளை அவர்கள் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். தங்கள் வாரிசுகளை அறிமுகப்படுத்தி மகிழ்ந்தனர். ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்கு ஆயுதப் படை மைதானத்தில் குடியிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒன்றிணைத்த நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. வாரிசுகள் ஏற்படுத்திய இந்த நிகழ்வு, ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள போலீசாரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்