"சித்ர குளத்தை தூர்வார அனுமதி பெற்ற பிறகும் பணி தொடங்கவில்லை" - அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டு

சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்ர குளத்தை தூர்வார தமிழக அரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி அனுமதி பெற்ற பின்னரும் அந்த பணியை தொடங்கவிடாமல் தடுக்கப்படுவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார்.
x
சென்னை மயிலாப்பூரில் உள்ள சித்ர குளத்தை தூர்வார தமிழக அரசிடம் இருந்து காங்கிரஸ் கட்சி அனுமதி பெற்ற பின்னரும் அந்த பணியை தொடங்கவிடாமல் தடுக்கப்படுவதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சி சித்ர குளத்தை தூர்வார முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். குளத்தை தூர்வார தடையில்லா சான்றிதழ்களை அறங்காவலர்கள் வழங்காவிட்டால் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என்று அமெரிக்கை நாராயணன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்