குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருட்டு

குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமரா திருட்டு
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில், தேர்தலுக்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை, மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, காந்திநகர் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள 30ஆவது வாக்குச்சாவடி அறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை திருடிய மர்ம நபர்கள், வாக்குச்சாவடி அமைந்துள்ள பள்ளியில் இருந்த 11 கம்ப்யூட்டர்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக பணியாளர் அளித்த தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்