தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை
x
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த கேரளா மாநிலம், வண்டிபெரியாரை சேர்ந்த சைஜூ என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  தற்கொலை செய்து கொண்ட மாணவன் கல்லூரி விடுதியில் கஞ்சா பயன்படுத்தியது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவரின் அறையில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சா போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்