தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையில் குவிந்த ஏராளமான பொதுமக்கள் ஆற்றில் மலர்களை விட்டு பிரார்த்தனை செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாட்டம்
x
புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டியும் வழிபாடு செய்தனர்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கொப்புடையம்மன் கோவில் குளக்கரையில் ஆடி 18 பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் செல்லும் காவிரி ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் புனித நீராடி ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாடினர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரியாற்றில் ஏராளமான பெண்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து படையலிட்டு வழிபாடு நடத்தினர். அதேபோல் புதுமண தம்பதியினர் புத்தரிசி படைத்து, புது திருமாங்கல்யம் மாற்றி வழிபட்டனர்


Next Story

மேலும் செய்திகள்