திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.22.55 லட்சம் தங்கம் பறிமுதல்

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சிக்கு கடத்தி வந்த ரூ.22.55 லட்சம் தங்கம் பறிமுதல்
x
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த சென்னையை சேர்ந்த முகமது யாசின், ஷாஜகான் உள்ளிட்ட 5 பேரிடம், சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது, அவர்கள் உடலில் மறைத்து கடத்தி வந்த, 26 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனையடுத்து தங்கம் கடத்தல் தொடர்பாக 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்