சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி...

சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
x
சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி  நடைபெற்று வருகிறது. "மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரணம்" என்ற பெயரில் நடைபெறும் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய கப்பல்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பங்கேற்றுள்ளனர்.  அவர்களுக்கு புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில், ஆபத்தான பகுதிகளில் சிக்கிய பொதுமக்களை பத்திரமாக மீட்பது மற்றும் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்டு, கரைக்கு கொண்டு வருவது போன்ற நிகழ்ச்சிகள் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்