ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்... காவிரிக் கரையில் பெண்கள் உற்சாக வழிபாடு...

தமிழகம் முழுவதும் காவிரி கரை உள்ளிட்ட முக்கிய நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
x
திருச்சியில் திரண்ட ஏராளமானோர், காவிரி ஆற்றில் புனித நீராடினர். புத்தாடைகள் அணிந்து முளைப்பாரி, மாலைகளை ஆற்றில் விட்டுவிட்டு, படித்துறையில் வாழை இலை போட்டு அதில் மங்கல பொருட்களை வைத்து, காவிரி அன்னையை வழிபட்டனர். பூஜையில் வைக்கப்பட்ட மஞ்சள் நூலை, சுமங்கலி பெண்கள், திருமணமாகாத பெண்களுக்கு கையிலும், சிலர் கழுத்திலும் கட்டி விட்டனர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஒரு சில மக்கள், விவசாயம் செழிக்க கும்மியடித்து காவிரியை வழிபட்டனர்.

ஈரோடு மாவட்டம் பவானிகூடுதுறை காவிரி கரை, பொதுமக்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இலையில் மஞ்சள், குங்குமம், தாலிச்சரடு, காதோலை, கருகமணி, வளையல், பூ, அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய், ஜாக்கெட் துணி ஆகியவற்றை வைத்து அதற்கு தேங்காய் உடைத்து சூடம் காட்டி, காவிரி அன்னையை சுமங்கலி பெண்கள் வழிபட்டனர். வயதில் மூத்த பெண்கள், நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்குக் கழுத்திலும் கட்டிவிட்டார்கள். தலை ஆடி கொண்டாடும் புதுமண தம்பதிகள், திருமணத்தின் போது அணிந்திருந்த மாலைகளை வாழைஇலையில் வைத்து காவரி ஆற்றில் விட்டனர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி பவானி கூடுதுறையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்