உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணை தீவிரம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த, சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர்.
உமா மகேஸ்வரி கொலை வழக்கு : சிபிசிஐடி விசாரணை தீவிரம்
x
நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில், திமுக பெண் பிரமுகர் சீனியம்மாளிடம் விசாரணை நடத்த, சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். உமா மகேஸ்வரி, கடந்த 23 ம் தேதி வீட்டில் இருந்த போது, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் பணிப்பெண் மாரி ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக திமுக பெண் பிரமுகர் சங்கரன்கோவில் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டார். சிபிசிஐடி போலீஸ் உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு, தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். சங்கரன்கோவில் சீனியம்மாளை விசாரிக்க முடிவு செய்துள்ள சிபிசிஐடி போலீசார், மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்