"சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பலை தடுக்காத ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் மீது விரைவில் வழக்கு" - தேவசகாயம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் மற்றும் மலைகளை வெட்டிக் கடத்துவதை தடுக்காத ஆட்சியர் மற்றும் எஸ். பி. மீது வழக்கு தொடர உள்ளதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார்.
சட்டவிரோதமாக மணல் கடத்தும் கும்பலை தடுக்காத ஆட்சியர், எஸ்.பி., உள்ளிட்டோர் மீது விரைவில் வழக்கு - தேவசகாயம்
x
கன்னியாகுமரி மாவட்டத்தில் மண் மற்றும் மலைகளை வெட்டிக் கடத்துவதை தடுக்காத ஆட்சியர் மற்றும் எஸ். பி. மீது வழக்கு தொடர உள்ளதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியுள்ளார். ஆரல்வாய்மொழி, தோவாளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மண் அள்ளவும், மலையை வெட்டவும் தடை செய்யப்பட்ட பகுதி என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடை செய்யப்பட்ட இடங்களில் சட்டவிரோதமாக  மண் மற்றும் மலை வெட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்காத ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது 'மீண்டெழும் குமரி இயக்கம்' சார்பில் விரைவில், வழக்கு தொடர உள்ளதாகவும் தேவசகாயம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்