கொடுங்கையூர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், விரைவில் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்

சென்னை கொடுங்கையூரில் அமைக்கப்பட்டு வரும் அதி நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.
x
இந்தியாவிலேயே தமிழகத்தில் முதல் முறையாக, எதிர் சவ்வூடு பரவுதல் முறை மூலம் கழிவுநீர் அதிக அளவு சுத்திகரிக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை கொடுங்கையூர், கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. 

இந்த நிலையங்களை விரைவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். சென்னை மாநகரில் இருந்து பெறப்படும் 525 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரித்து, அதிலிருந்து பெறப்படும் 45 மில்லியன் லிட்டர் நன்னீரை, வட சென்னை, ஸ்ரீபெரம்புதூர் மற்றும் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
 
அதேநேரத்தில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் இதுவரை தொழிற்சாலைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த 40 மில்லியன் லிட்டர் தண்ணீர், மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நடவடிக்கைகளால் சென்னை மாநகரின் குடிநீர் தேவை பெருமளவு பூர்த்தியாகும் என கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 Next Story

மேலும் செய்திகள்