மருத்துவ படிப்பு இடம் கிடைக்காததால் தூக்கு மாட்டி மாணவி தற்கொலை

இரண்டு முறை நீட் நுழைவு தேர்வு எழுதியும் மருத்துவ இடம் கிடைக்காததால் பெரம்பலூர் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மருத்துவ படிப்பு இடம் கிடைக்காததால் தூக்கு மாட்டி மாணவி தற்கொலை
x
பெரம்பலூர் தீரன் நகரை  சேர்ந்தவர் செல்வராஜ். ஒய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனரான இவரின் மகள் கீர்த்தனா ப்ளஸ் 2 தேர்வில் ஆயிரத்து 58 மதிப்பெண் பெற்றார். இதனையடுத்து மருத்துவ படிப்பில் சேர ஆசைப்பட்ட அவர்,  தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்தார். ஆனால் 450 மதிப்பென் பெற்றதால் கடந்த ஆண்டு அவருக்கு மருத்துவ இடம் கிடைக்கவில்லை. இதனையடுத்து இந்த ஆண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதினார். அவரால் 384 மதிப்பெண் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் கீர்த்தனாவால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏறபட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கீர்த்தனா,  தமது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய பெரம்பலூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவ​மனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்