தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

100 நாள் வேலை திட்டத்தை அதிமுக அரசு ஒரு போதும் நிறுத்தாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
x
வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்  ஏ.சி சண்முகத்தை ஆதரித்து அணைக்கட்டு பகுதியில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 100 நாள் வேலை திட்டம் நிறுத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறுவது பொய் குற்றச்சாட்டு என்றார்.  வறட்சி பாதித்த புதுக் கோட்டை,நாகை,திருவாரூர் மாவட்டங்களில் மக்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள் வேலை திட்டமாக நீட்டித்துள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்தார்.

"குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும்"

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதிகுக்கு உட்பட்ட ஒடுக்கத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், இன்னும் 4 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என  உறுதி அளித்தார். ஜெயலலிதா கனவுப்படி 2023ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும் என்றார். மேலும், புண்ணிய பூமியான தஞ்சையில் விளைந்தால்தான் சோறு என்ற நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசாணையில், திமுக பெற்றுத் தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார். 

Next Story

மேலும் செய்திகள்