தகுதியுள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை - ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கினார்.
x
வேலூரில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரசாரத்தை தொடங்கினார். வாணியம்பாடி அடுத்த தெக்குபட்டு கிராமத்தில் வேட்பாளர் கதிர் ஆனந்திற்கு ஆதரவாக வாக்கு சேகரித்த அவர், தொடர்ந்து அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர்  ராமநாயக்கன் பேட்டை , ஆவாரங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் மக்களிடம் வாக்கு சேகரித்தார் முன்னதாக, ஸ்டாலினை உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள், அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

"100 நாள் வேலை திட்டம் முறைப்படுத்தப்படும்"

வேலூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்றால் நுாறு நாள் வேலை திட்டம் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடியில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்ட அவர், தகுதி உள்ள அனைவருக்கும் முதியோர் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்