முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : ரூ. 25 கோடி சொத்தை அடைய கொலையா?

நெல்லை முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியை, சொத்துக்காக உறவினர்களே கூலிப்படை மூலம் கொலை செய்திருக்கலாம் என கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கு : ரூ. 25 கோடி சொத்தை அடைய கொலையா?
x
நெல்லை மாநகர முதல் பெண் மேயரான உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன், பணிப் பெண் மாரியம்மாள் ஆகிய மூவரும் வீட்டுக்குள் வைத்து கொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை தொடர்பாக, உறவினர்கள் உள்பட 70 பேரிடம் முதல் கட்ட விசாரணையை துவக்கிய போலீசார், அதை 7 பேராக சலித்து எடுத்தனர். கொலை நடந்த நாளில், அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த வட மாநில இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டும் விசாரிக்கப்பட்டனர்.  இதனிடையே, திருப்புளி போன்ற கூரான கம்பியால் குத்தப்பட்டு கொலை நடந்திருக்கலாம் என்றும், உமா மகேஸ்வரியின் கழுத்திலும், இதயத்திலும் ஒருவிரல் அளவுக்கு ஆழமான துளை இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவரது 25 கோடி ரூபாய் அளவு சொத்துக்களை அடையும் நோக்கில், வெளி மாநில மற்றும் மாவட்ட கூலிப் படை மூலம் கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்