தி.மு.க. பிரமுகரின் மகள் காதல் திருமணம் : உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்

பெண்ணின் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது.
தி.மு.க. பிரமுகரின் மகள் காதல் திருமணம் : உயிருக்கு ஆபத்து இருப்பதாக புகார்
x
பெண்ணின் உறவினர்களால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, சென்னையைச் சேர்ந்த காதல் ஜோடி ஒன்று, மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு தி.மு.க. சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட காயத்ரி ஸ்ரீராமின் மகள் நிதர்சனா, மைக் ரிச்சர்ட்சன் என்பவரை காதலித்து திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, திருப்பரங்குன்றம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இந்நிலையில், நிதர்சனாவை காணவில்லை என்று கூறி பெற்றோர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால் பூந்தமல்லி போலீசார், நிதர்சனாவை அழைத்து செல்ல வந்தனர். ஆனால் தமது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி, நிதர்சனா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டதால், இந்த வழக்கு திருப்பரங்குன்றம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்