விருதுநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை : 27 சவரன், 60 ஆயிரத்தை அள்ளிச் சென்ற கும்பல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
விருதுநகரில் அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளை : 27 சவரன், 60 ஆயிரத்தை அள்ளிச் சென்ற கும்பல்
x
சாத்தூர் திருப்பதி நகரில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவர் வீட்டில், 10 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த கும்பல், அடுத்து பெரியார் நகரில் அரசு பள்ளி ஆசிரியை சாந்தி வீட்டில் கைவரிசையை காட்டி உள்ளது. அங்கு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற கும்பல், பீரோவில் இருந்த 17 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துள்ளது.  இதேபோல, சாந்தி வீட்டிற்கு அருகே உள்ள  காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் பாண்டியன் வீட்டையும் கொள்ளை கும்பல் விட்டு வைக்கவில்லை. பாண்டியின் வீட்டில் 10 சவரன் நகை மற்றும் 20 ஆயிரம் ரூபாயை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றுள்ளது. 
இந்த தொடர் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்