சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுத்த விவகாரம் : பழவந்தாங்கல் காவல் ஆய்வாளர் இடைநீக்கம்
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்த விவகாரம் தொடர்பாக தவறான அறிக்கை அளித்த காவல் ஆய்வாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை நங்கநல்லூர் பகுதியில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை தடுக்க கோரிய வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தவறான அறிக்கை தாக்கல் செய்த பழவந்தாங்கல் காவல் ஆய்வாளரை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், நீதிமன்றம் உத்தரவிட்டால் விரிவான விசாரணை நடத்தப்படும் என கூறினார். இதையடுத்து இடைக்கால உத்தரவுக்காக, வழக்கை ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Next Story