41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றக்கூடாது : மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
41 படைக்கல தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றக்கூடாது : மத்திய அரசுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை
x
தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய  அரசு உடனே கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 6 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்பட நாடு முழுவதும் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை,  தனியாரிடம் தாரை வார்க்கும்  மத்திய அரசின் முயற்சிக்கு, கடும் எதிர்ப்பைத்  தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். தொழிலாளர்கள், ஊழியர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும்,  அவர்களுடன் கலந்து பேசி, நியாயமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு,  41 தொழிற்சாலைகளும் மத்திய அமைச்சக நேரடி நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்படத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

 


Next Story

மேலும் செய்திகள்