புதிய கல்விக் கொள்கை : ஆய்வறிக்கையை ஸ்டாலினிடம் அளித்தார் குழு தலைவர் பொன்முடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, திமுகவின் கருத்துகளை மத்திய மனித வள மேம்பாட்டு துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கை : ஆய்வறிக்கையை ஸ்டாலினிடம் அளித்தார் குழு தலைவர் பொன்முடி
x
புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, திமுகவின் கருத்துகளை மத்திய மனித வள மேம்பாட்டு துறைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஆராய முன்னாள் அமைச்சர் பொன்முடி தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்தது. இந்த குழு தனது அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் இன்று அளித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு அனுப்ப திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்துகள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்