திருவாரூர் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகார் : இளம்பெண் தீக்குளிப்பு

கணவர் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் : வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய புகார் : இளம்பெண் தீக்குளிப்பு
x
திருவாரூர் அருகே மருதப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்தவர் அருண். இவரின் மனைவி மைதிலி. இவர்களுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. அப்போது மைதிலி வீட்டில் இருந்து 50 சவரன் நகை மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை பொருட்களையும் வழங்கியுள்ளனர். இந்த நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு மைதிலியை கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன் கார் வாங்கித் தருமாறு கூறி அவர்கள் கொடுமைப்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில் மனமுடைந்த மைதிலி தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி எரிந்து கொண்டிருந்த நிலையிலும் கணவர் அருண்குமார் மைதிலியின் கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்