அம்பத்தூர் காவல் துணைஆணையர் முன்னிலையில் 'ரூட்டு தல' மாணவர்கள் உறுதிமொழி

சென்னை அம்பத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரன் முன்னிலையில் ஆஜரான ரூட்டுதலை மாணவர்கள் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என பிரமாணப் பத்திரம் எழுதி கொடுத்து உறுதி மொழி ஏற்றனர்.
x
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அரும்பாக்கத்தில் மாணவர்கள், கத்திகளுடன் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள ரூட்டு தலைகள் கண்டறிய பட்டு, அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து, வன்முறையில் ஈடுபடமாட்டோம் என போலீசார் உறுதி மொழி பிரமாணப் பத்திரம் எழுதி வாங்கி வருகின்றனர். இன்று, அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி, பூவிருந்தவல்லி, மாங்காடு, அம்பத்தூர், திருவேற்காடு, பட்டாபிராம், போரூர் உள்ளிட்ட பகுதிகளை சார்ந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 30 பேர் வரவழைக்கப்பட்டு உறுதிமொழி பிரமாப்ண பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. இதன் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவர்கள் அடுத்த ஓராண்டுக்கு எந்த ஒரு தவறு செய்தாலும், அவர்களை கைது செய்ய அம்பத்தூர் துணை ஆணையருக்கு அதிகாரம் உண்டு. இந்நிலையில்,  மாணவர்களின் பெற்றோர்களும் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து  மாணவர்களையும் போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதுவரை மொத்தம் 54 பேரிடம் போலீசார் எழுதி வாங்கி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்