2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
x
தென்மேற்கு பருவமழை தற்போது கர்நாடக பகுதிகளில் வலுவாக உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில், செய்தியாளர்களை சந்தித்த, வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இந்த தகவலை வெளியிட்டார். தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அப்போது அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் இடைவெளி விட்டு, இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்