நெல்லை மூவர் படுகொலை : துப்பு கிடைக்காமல் குழப்பத்தில் போலீசார்

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பு கிடைக்காததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
நெல்லை மூவர் படுகொலை : துப்பு கிடைக்காமல் குழப்பத்தில் போலீசார்
x
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்பட 3 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துப்பு கிடைக்காததால் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த 23 ஆம்தேதி நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  உறவினர்கள், நண்பர்கள் என 60க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதில், 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித்திரிந்தது தெரியவந்துள்ளது. அதில், இரண்டு பேர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் உள்ளதால், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும், அந்த நபர்களோடு ஒப்பிட்டு போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே,கொலை நடந்த இடத்திலும் அதனை சுற்றியுள்ள இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள செல்போன் டவர்களில் பதிவான செல்போன் எண்களைக் கொண்டும் விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2011 ஆம் ஆண்டு இதே போல பேராசிரியர் மணிராஜ் என்பவர் அவரது மனைவியுடன், கொலை செய்யப்பட்டார். அப்போது, அங்கிருந்து கிடைக்கப்பெற்ற கைரேகை மற்றும் தடயங்களையும் தொடர்பு படுத்தியும், தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Next Story

மேலும் செய்திகள்