மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் பதவியேற்பு

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களாக வைகோ உட்பட 5 பேர் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் பதவியேற்பு
x
மைத்ரேயன், டி.ராஜா உள்ளிட்ட 6 மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் இருந்து 6 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதிமுக சார்பாக சந்திர சேகர், முகமது ஜான், பாமக சார்பாக அன்புமணி ராமதாஸ், திமுக சார்பாக சண்முகம், வில்சன் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் புதிய எம்பிக்களாக போட்டியின்றி தேர்வாகினர். அவர்களில், அன்புமணியை தவிர மற்ற 5 பேரும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று பதவியேற்றுக் கொண்டனர். வைகோ உள்ளிட்ட 5 தமிழக எம்பிக்களும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். எம்பிக்களாக பதவியேற்றதும் அவை தலைவரும் துணை குடியரசு தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம் அவர்கள் வாழ்த்து பெற்றனர். வைகோ பதவியேற்றபோது, இந்திய இறையாண்மையை காப்பதாக உறுதி எடுத்துக் கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்