37 குளங்களில் தூர்வாரும் பணிகள் : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 37 குளங்கள் 14 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 37 குளங்கள் 14 கோடி ரூபாய் செலவில் தூர் வாரப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ஜலசக்தி அபியான் திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதியாக்குறிச்சி, தருவைக்குளம் தூர்வாரும் பணிகள் 29 லட்சம் ரூபாய் செலவில் நடைபெற்று வருவதாக கூறினார். மாவட்டம் முழுவதும் 30 குளங்களில் தூர்வாரும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story