தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை குறித்து தற்போது பார்க்கலாம்
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை...
x
அவலாஞ்சி நீர்வீழ்ச்சியில் பெருக்கெடுத்த தண்ணீர்
 
ஊட்டியில் வெளுத்து வாங்கிய மழையால் அவலாஞ்சி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் பெருக்கெடுத்தது.சுமார் மூன்று மணி நேரம் பெய்த மலையால் தேயிலை மற்றும் காய்கறி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். அணைகட்டுகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கொடைக்கானல் மலை பகுதியில் சுமார் 3 மணி நேரம் மழை 

கொடைக்கானல் மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஒடியது. அத்துடன் வெள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

திருவண்ணாமலையில் கன மழை 

திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலின் தாக்கம் நிலவி வந்த நிலையில், இடியுடன் பெய்த கனமழையால் நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

Next Story

மேலும் செய்திகள்