ஸ்டேட் வங்கி தேர்வு கட்ஆப் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
ஸ்டேட் வங்கி தேர்வு கட்ஆப் விவகாரம் : ஸ்டாலின் கண்டனம்
x
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று, திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்டேட் வங்கி தேர்வில், பிற வகுப்பினர் தேர்ச்சி பெற அதிக கட்ஆப் மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28 புள்ளி 5 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி என்பது சமூக நீதியை பாதிக்கும் செயல் என்றும், அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக நீதியை மத்திய அரசு படுகுழியில் தள்ளியிருப்பதாகவும் ஸ்டாலின், தமது பதிவில் குற்றம்சாட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்