மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் - எம்.எல்.ஏ நம்பிக்கை
நாகப்பட்டினத்தை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினத்தை பிரித்து, மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு விரைவில் புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று மயிலாடுதுறை அதிமுக எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மயிலாடுதுறை அதிமுக எம்எல்ஏ ராதாகிருஷ்ணன் நிவாரண உதவிகள் வழங்கினார். இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏக்களுடன் இணைந்து முதலமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளதாகவும், நிச்சயம் கோரிக்கை நிறைவேறும் என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story