ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுவதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி உள்ளிட்ட அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்று இரவு முதல் 10 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
"அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்"
மெயின்அருவி. ஐந்தருவி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் பாறைகளாக காட்சியளித்த ஒகேனக்கல் சுற்றுலா தளம் தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. அருவியின் அழகை ரசிக்க அதிகாலை முதலே சுற்றுலாப்பயணிகள் ஒகேனக்கல்லுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
Next Story