சென்னைக்கு குடிநீர் கொண்டு வர 2-வது ரயில் ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது

சென்னையின் குடிநீர் தேவைக்காக ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் இரண்டாவது ரயில் இன்று புறப்பட்டது.
x
சென்னையின் குடிநீர் தேவையை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை  65 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 

இதையடுத்து,  ஜோலார்பேட்டை அடுத்த மேட்டுசக்கரகுப்பத்தில் அமைந்துள்ள ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர்தேக்க தொட்டியில் இருந்து, ரயில் மூலம் சென்னைக்கு தினரி 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கடந்த 10 நாட்களாக கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், மேலும் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுசெல்லும் வகையில் 50 வேகன் கொண்ட 2 வது ரயில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தினசரி 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்வதற்காக ரயில்வே நிர்வாகத்திடம் சென்னை குடிநீர் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி  தற்போது தினசரி 50 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படுவதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்