குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி : சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை

குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி, கோவையில், 13 லட்ச ரூபாயை கொள்ளையடித்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக மோசடி : சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து போலீசார் நடவடிக்கை
x
கேரளாவை சேர்ந்த, நவ்ஷாத், என்பவரை, சிவா என்பவர் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி அழைத்து வந்துள்ளார். 
அப்போது நான்கு பேர் கொண்ட கும்பல் தாங்கள் விஜிலென்ஸ் அதிகாரிகள் எனவும் கையில் கொண்டு வந்திருந்த பணத்தை தருமாறு கேட்டுள்ளனர். உடனே பயத்தில் ஆழ்ந்த இருவரும் கையில் இருந்த 13 லட்ச ரூபாயை கொடுத்துள்ளனர்.பின்னர், 4 பேர் கொண்ட கும்பல் தப்பி சென்றது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்து தப்பி ஓடிய 6 பேரை கைது செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்