மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தமிழக அரசிடம் மழை நீரை சேகரித்து வைக்க திட்டங்கள் எதுவும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மழை நீர் சேகரிப்பு திட்டம் எதுவும் இல்லை : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்
x
சென்னை மாநகராட்சியில் ஆயிரத்து 101 கோடியே 43 லட்சம் ரூபாய் உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப் பட உள்ள திட்டம் குறித்த பொது நல வழக்கு நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசிடம் மழை நீரை சேமித்து வைக்க எந்த ஒரு திட்டமும் இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள்  சென்னையில் எத்தனை நீர் நிலைகள் பூங்காக்களாக மாற்றப்பட்டுள்ளன என கேள்வி எழுப்பினர்.  சென்னையில் அண்மையில் பெய்த மழை நீர் முற்றிலும் வடிந்து விட்டதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  அதை நேரில் ஆய்வு செய்ய தங்களுடன்  மாநகராட்சி அதிகாரிகள் வர தயாரா என்றும் வினவினர். மழை நீர் வடிகால்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள வழக்குரைஞர் ஆணையரை ஏன் நியமிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,  வழக்கு விசாரணையை ஜூலை 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்