ஸ்டாலின் நிலைப்பாடை மாற்றி 2021 தேர்தல் பற்றி பேசுகிறார் - அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை மாற்றி தற்போது 2021 தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று கூறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
x
சாப்பிட்டு போட்ட இலைகள் போன்று விலகி சென்ற சிலரை பற்றி பேச விரும்பவில்லை என்றும், ஸ்டாலின் தனது நிலைப்பாட்டை மாற்றி தற்போது 2021 தேர்தலில் வெற்றிபெறுவேன் என்று கூறி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அண்ணா மேலாண்மை நிலையத்தில், 2019-20 ஆம் ஆண்டிற்கான மேலாண்மை பயிற்சி நாட்காட்டியை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டார். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், எத்தனை முயற்சிகள் செய்தாலும் அதிமுகவை யாரும் தொட்டு பார்க்க முடியாது என்றும், வேலூர் அதிமுக கோட்டை என்பதால் அங்கு நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார். 

"யார் வேண்டுமானாலும் கருத்து கூற உரிமையுள்ளது"

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், புதிய மொழி கொள்கைக்கு நடிகர் சூர்யாவின் கருத்துக்கு, நடிகர்கள் ஆதரவு தெரிவித்திருக்க ஜனநாயகப்படி அவர்களுக்கு உரிமை உண்டு என்று தெரிவித்தார். மேலும், அதிமுக நல்ல திட்டங்களை மட்டுமே ஏற்கும் என்றும், மக்கள் விரும்பாத திட்டங்களை ஏற்காது என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்