மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் : குடும்பத்தை சீர் குலைத்த துபாய் நட்பு
பதிவு : ஜூலை 22, 2019, 08:51 AM
கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் கடந்த 5 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்துவரும் நிலையில், இவரது மனைவி சாந்தி இரண்டு குழந்தைகளுடன் பொன்பரப்பியில் வசித்து வந்தார். இந்த நிலையில், இளையராஜா துபாயில் தன்னோடு வேலை செய்த சூளகிரியை சேர்ந்த சேட்டு என்பவர் சொந்த ஊர் திரும்பியபோது, தனது மனைவிக்கு சில பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். அவற்றை கொடுக்க வந்த இடத்தில் சேட்டுவிற்கும், சாந்திக்கும் பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து சாந்தி, தனது பிள்ளைகளை விட்டு விட்டு சேட்டுவுடன் சூளகிரிக்கு வந்து சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளார். 

இதனையறிந்து துபாயில் இருந்து வந்த இளையராஜா, சூளகிரி சென்று சாந்தியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும், அவர் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, சாந்தியின் தலையை சுத்தியலால் தாக்கி, கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் பொன்பரப்பி கிராமத்தில் இளையராஜாவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை" - உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கமல் கருத்து

திருமணத்தை தாண்டிய உறவு குற்றமில்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

7671 views

பிற செய்திகள்

வேளாங்கண்ணியில் அதிரடிப்படை குவிப்பு : கடலோர பகுதிகளில் தீவிர ரோந்து பணி

தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை குவிக்கப்பட்டுள்ளதுடன், கடலோர சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

95 views

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் ஊடுருவல் - உளவுத்துறை தகவலால் அதிர்ச்சி

தமிழகத்தில் தீவிரவாதிகள் 6 பேர் நுழைந்து இருப்பதாகவும், அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பதாகவும் உளவுத்துறை எச்சரித்துள்ளது.

44 views

அமிதாப் தான் மெகாஸ்டார் - சிரஞ்சீவி சொல்கிறார்

இந்திய திரையுலகில் ஒரே ஒரு மெகாஸ்டார் தான், அது அமிதாப் பச்சன் தான் என சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

27 views

ரசிகர்கள் கொண்டாடும் அஜித் படம்

உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்தில் காட்சியளிக்கும் நடிகர் அஜித் புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

4422 views

திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி

96 படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஜோடியாக பேசப்பட்ட விஜய் சேதுபதி, திரிஷா, தற்போது புதிய படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

196 views

நிதி ஆயோக் துணைத் தலைவர் எச்சரிக்கை - அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

இந்திய பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்க வாய்ப்புள்ளதாக நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் எச்சரித்துள்ளார்.

176 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.