முறையாக பராமரிக்கப்படாத ஆண் குழந்தை : பால் வாங்கி கொடுத்த பெண் காவலர்

கோவையில் முறையாக பராமரிக்கப்படாத குழந்தைக்கு பால் வாங்கி கொடுத்த காவலருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
முறையாக பராமரிக்கப்படாத ஆண் குழந்தை : பால் வாங்கி கொடுத்த பெண் காவலர்
x
கோவை அரசு மருத்துவமனையில் உள்ள ஆவின் பூத் அருகே ஆண் ஒருவர் கைக் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். குழந்தையின் தாயாரும் அலட்சியமாக இருந்ததால், சந்தேகமடைந்த பொதுமக்கள் குழந்தை திருடப்பட்டிருக்கலாம் என அச்சம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டபோது குழந்தையின் பெற்றோர் இவர்கள் தான் என உறுதியானது. பசியால் அழுத குழந்தைக்கு தலைமை காவலர் சுந்தரி, பால் வாங்கி கொடுத்தார். பெற்றோரால் முறையாக பராமரிக்கப்படாத அந்த குழந்தையை காப்பகத்துக்கு எடுத்து செல்வதாக சமூகநலத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பெற்றோர், குழந்தையை கவனமாக பார்த்து கொள்வதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்ததை அடுத்து குழந்தையை அதிகாரிகள் பெற்றோரிடமே ஒப்படைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்