தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார் தெரிவித்துள்ளார்.
x
கல்வி, தொழில் அனைத்திலும் இந்தியர்கள் பெருமையுடன் இருப்பதாக மத்திய நிதியமைச்சர்  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், நடைபெற்ற நகரத்தார்களின் சர்வதேச வணிகம் மற்றும் வர்த்தகம் தொடர்பான கருத்தரங்கினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசிய அவர், கல்வி, தொழில் என அனைத்து பரிமாணங்களிலும் இந்தியர்கள் முன்னேறி வருகின்றனர் என்றார்.  அடுத்த தலைமுறையின் போது இந்தியர்கள்தான் மற்ற நாட்டினருக்கு குருவாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.


"தமிழகத்தில் இந்தியை திணிக்கவில்லை"

தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்யவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழை வளர்க்க  மத்திய அரசும் முயற்சி செய்து வருவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்