உதயமாகும் புதிய செங்கல்பட்டு மாவட்டம்... உத்தேச நகரங்கள் - தாலுகாக்கள்

செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு உதயமாகும் புதிய மாவட்டத்தில், தாம்பரம் - பல்லாவரம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
x
செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு உதயமாகும் புதிய மாவட்டத்தில், தாம்பரம் - பல்லாவரம் ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த உத்தேச பட்டியலில், எந்தெந்த பேரூராட்சிகள், தாலுகாக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள் இடம் பெறும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உதயமாகி உள்ளது. இந்த புதிய மாவட்டங்களில் இடம் பெறும் நகரங்கள், பேரூராட்சிகள், தாலுகாக்கள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்கள், உத்தேசமாக முடிவு செய்யப்பட்டு உள்ளன. 

இதன்படி, செங்கல்பட்டு - மறைமலை நகர் - மதுராந்தகம் - பல்லாவரம் - தாம்பரம் - பம்மல் - குரோம்பேட்டை - அனகாபுத்தூர் ஆகிய நகரங்கள் இடம்பெறும். கூடுவாஞ்சேரி - பீர்க்கன்கரணை - பெருங்களத்தூர் - மாடம்பாக்கம் - செம்பாக்கம் - திருநீர்மலை - மேடவாக்கம் - திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் - மாமல்லபுரம் - இடைக்கழிநாடு -  கருங்குழி - அச்சிறுப்பாக்கம் ஆகிய பேரூராட்சிகள் இடம் பெறும். குன்றத்தூர் பேரூராட்சியை பொறுத்தவரை, வருவாய் வட்டம் பிரிக்கும் போது, முடிவு செய்யப்படும்.

செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் - திருப்போரூர் - செய்யூர் - மதுராந்தகம் - தாம்பரம் -  பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன. காட்டாங்கொளத்தூர் -  புனித தோமையர்மலை - திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் - சித்தாமூர் - லத்தூர் - மதுராந்தகம் - அச்சிறுப்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் இடம் பெறும். எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்