ரூ 200க்கு புதிய செல்போன்... பிரபல செல்போன் கடையில் குவிந்த மக்கள் ஏமாற்றம்

புதுக்கோட்டையில் கடை திறப்பு விழா சலுகையாக 200 ரூபாய்க்கு செல்போன் தருவதாக கூறி விளம்பரம் செய்துவிட்டு, செல்போன் தர மறுத்த‌தால், அதிகாலை முதலே காத்திருந்த மக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
x
பிரபல செல்போன் கடை நிறுவனம் ஒன்று , இன்று புதுக்கோட்டையில் தன் கிளையை தொடங்கியுள்ளது. இதையொட்டி திறப்பு விழா சலுகையாக, 200 ரூபாய்க்கு புதிய செல்போன் தருவதாக விளம்பரம் செய்த‌தாக கூறப்படுகிறது. இதனால் அதிகாலை முதலே அந்த கடை முன்பு மக்கள் வரிசையில் காத்துக்கிடந்தனர். இந்த நிலையில், முதல் 10 பேருக்கு மட்டும் செல்போன் வழங்கிய ஊழியர்கள், மற்றவர்களுக்கு செல்போன் தர மறுத்துள்ளனர். இதனால் அங்கு கூடியிருந்த மக்களுக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்