போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...

சென்னை மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்களின் கண்ணாடிகளை குடி போதையில் இருந்த சிலர் நள்ளிரவில் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போதையில் ஆட்டோக்களின் கண்ணாடிகளை உடைத்த ஆசாமிகள்...
x
சென்னை மெரினா கடற்கரை  கண்ணகி சிலை பின்புறம் உள்ள சர்வீஸ் சாலையில் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுனர்கள்  நேற்று இரவு  ஆட்டோவினுள் தூங்கி கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த போதை ஆசாமிகள், 5 பேர் கையில் வைத்திருந்த கட்டையால் ஆட்டோ கண்ணாடிகளை வரிசையாக உடைத்துள்ளனர். உடனே விழித்துக்கொண்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கூச்சலிட்டதால், அனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் சேர்ந்து அவர்களை  பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த காவல்துறையினர்  ஆட்டோ கண்ணாடிகளை உடைத்த நபர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்