மக்களவை செல்ல தகுதியானவர் விஜிலா - வெங்கய்யா நாயுடு

அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மக்களவைக்கு செல்ல தகுதியானவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பாராட்டினார்.
மக்களவை செல்ல தகுதியானவர் விஜிலா - வெங்கய்யா நாயுடு
x
அ.தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், மக்களவைக்கு செல்ல தகுதியானவர் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பாராட்டினார். மாநிலங்களவையில் பேசிய விஜிலா சத்தியானந்த், தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியார் திட்டம் குறித்து எடுத்துரைத்தார். மழைநீரை சேமிக்கும் விதமாக அனுமதிக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்ற, மத்திய அரசு தர வேண்டிய 50 சதவிகித நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, உறுப்பினர்கள் கூர்ந்து கவனித்தால், விஜிலா சத்யானந்த் மக்களவைக்கு செல்ல தகுதியானவர் என்று பாராட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்