நீட் விவகாரம் : முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

நீட் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
x
நீட் மசோதாவை மத்திய அரசு திருப்பி அனுப்பிய விவகாரத்தில், பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி பதவி விலக வேண்டும் என்று ம.தி.மு.க, பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ-களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வைகோ ஆஜராகினார். அடுத்தக் கட்ட விசாரணையை  வரும் 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நீட் தேர்வு தொடர்பான மசோதா மத்திய அரசு திருப்பி அனுப்பியதை 2 ஆண்டுகளாக தமிழக அரசு மறைத்து விட்டதாக குற்றஞ்சாட்டினார்.  

Next Story

மேலும் செய்திகள்