அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர் ஆர்வம் - அமைச்சர்கள் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் தெரிவித்தார்.
x
பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. அண்ணா சாலையில் உள்ள மதரஸா பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் மற்றும் சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்திருப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்