சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...

யானைகள் நிதானமாக சென்றதால் காத்திருந்த வாகன ஓட்டிகள்.
சத்தியமங்கலம் அருகே நெடுஞ்சாலையை கடந்துசென்ற 4 காட்டு யானைகள்...
x
சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சுற்றித்திரிந்த 4  காட்டு யானைகளால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆசனூர் பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஓரத்தில் நீண்ட நேரமாக 4 காட்டு யானைகள் நின்று கொண்டிருந்தன. அப்பகுதியில் இருந்த தீவனத்தை சாப்பிட்ட யானைகள், பின்னர் ஒவ்வொன்றாக சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றன. இதனை அடுத்து வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களை எடுத்துச்சென்றனர்.

Next Story

மேலும் செய்திகள்