வறுமையால் வாடும் சிலம்பாட்ட வீரர் - உதவிக் கரம் நீட்டுமா தமிழக அரசு?

சர்வதேச அளவிலான சிலம்பாட்ட போட்டிக்கு தகுதி பெற்றும் போதிய பொருளாதார வசதியில்லாமல் தவிக்கும் இளைஞரின் போராட்டத்தை விவரிக்கிறது இந்த தொகுப்பு.
x
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த  பாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். கண் பார்வை இழந்த ஜெயக்குமார் ஊதுபத்தி விற்பனை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இவரது மகன் ஸ்ரீபிரகாஷ் தான் அந்த சாதனை இளைஞன். தனியார் பொறியியல் கல்லூரியில், 2ஆம் ஆண்டு படித்து வரும் ஸ்ரீபிரகாஷ்   சிறு வயதில் இருந்தே பாரம்பரிய சிலம்பாட்ட கலை மீது கொண்ட ஆர்வம் கொண்டவராக இருந்தார். முறையான சிலம்பாட்ட பயிற்சி  பெற்ற‌ அவர் மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் முதலிடம் பிடித்ததன் மூலம் வருகிற 30ஆம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடக்கும் சர்வதேச சிலம்பாட்ட போட்டிக்கு ஸ்ரீபிரகாஷ் தகுதி பெற்றுள்ளார். இந்த போட்டியில் கலந்து கொள்ள ஸ்ரீ பிரகாஷ்க்கு 70 ஆயிரம்  ரூபாய் வரை தேவைப்படுகிறது. ஆனால், அவரது குடும்ப பொருளாதார நிலையோ அதற்கு இடம் கொடுக்க வில்லை. இதனால், ஸ்ரீபிரகாஷ் சர்வதேச சிலம்பாட்ட போட்டியில் கலந்து கொள்வது கேள்வி குறியாகியுள்ள நிலையில் தமிழக அரசு உதவிகரம் நீட்டாதா என்ற ஏக்கத்துடன் காத்திருக்கிறார்  ஸ்ரீபிரகாஷ்..... வறுமையிலும் பல தடைகளை தாண்டிய அவர் ,  கைக்கெட்டும் தூரத்தில் உள்ள வெற்றியை  தொட துடிக்கிறார். அவரது கனவு நனவாக வேண்டும் என்பதே விளையாட்டு ஆர்வலர்களின் விருப்பம்.

Next Story

மேலும் செய்திகள்