அ.தி.மு.க. ஆட்சியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவிப்பு - தயாநிதிமாறன், தி.மு.க. எம்.பி.,
அ.தி.மு.க ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாக தி.மு.க. எம்.பி., தயாநிதிமாறன் விமர்சனம்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரில் செயல்படும் தொண்டு நிறுவனம் சார்பில் தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சி முடித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பல்லவன் சாலையில் உள்ள எஸ். எம். நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறன், அ.தி.மு.க ஆட்சியில் எந்த நல்ல திட்டமும் இல்லாததால் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருவதாக விமர்சித்தார்.
Next Story