ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு

புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
ஏரி, குளங்களை தூர்வார திட்டம் : ரஜினி மக்கள் மன்றத்தினர் அறிவிப்பு
x
புதுச்சேரியில் உள்ள ஏரி மற்றும் குளங்களை தூர் வார ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் முடிவு செய்தனர். இதன்படி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட மூலகுளம் பகுதியில் உள்ள குளத்தை  ரஜினி மக்கள் மன்றத்தினர் சுத்தப்படுத்தி தூர் வாரினர். அங்கிருந்த பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குளத்தின் கரைகளை பலப்படுத்தினர்.  மழைக் காலத்திற்கு முன்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்து ஏரி மற்றும் குளங்களை தூர்வார உள்ளதாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்